மெஸ்ஸியின் கோலைக் கண்டு கண்கலங்கிய பயிற்றுவிப்பாளர் ஸ்கலோனி...! - வைரலாகும் வீடியோ...!
மெஸ்ஸியின் கோலைக் கண்டு கண்கலங்கிய பயிற்சியாளர் ஸ்கலோனி கண்கலங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உலக கோப்பை கால்பந்து தொடர் -
4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் விளையாடி வருகிறது.
குரோஷியாவை வீழ்த்திய அர்ஜென்டினா -
நேற்று நள்ளிரவு லுசைஸ் ஐகானிக் மைதானத்தில் முதலாவது அரைஇறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த இரு அணிகளும் பயங்கரமான பலத்துடன் மல்லுக்கட்டி விளையாடின.
இதனால் களத்தில் அனல் பறந்தது. இந்த பரப்பான ஆட்டத்தில் முதல் பாதியில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி போட்டியின் 34-வது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார்.
நேற்று நள்ளிரவில் நடைபெற்ற அரைஇறுதிப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி மாபெரும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.
கண்கலங்கிய பயிற்றுவிப்பாளர் ஸ்கலோனி
இந்நிலையில், மெஸ்ஸியின் கோலைக் கண்டு கண்கலங்கிய பயிற்சியாளர் ஸ்கலோனி கண்கலங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நேற்று நள்ளிரவு பரபரப்பாக காணப்பட்ட மைதானத்தில் இரு அணிகளும் பயங்கரமாக அனல் பறக்க விளையாடின. இந்த அரையிறுதியில் நுழைய அர்ஜென்டினா அணியும், குரோஷியா அணியும் மல்லுக்கட்டின. அப்போது, ஆட்டம் தொடங்கிய 34வது நிமிடத்தில் மெஸ்ஸி தன் முதல் கோலை அடித்தார்.
அப்போது, அர்ஜென்டினா அணித் தலைமைப் பயிற்றுவிப்பாளர் லயனல் ஸ்கலோனி கண்கலங்கினார். மெஸ்ஸியால் தன் அணி வெற்றி பெறுவது உறுதி என்ற நம்பிக்கை அந்த கண்களில் தெரிந்தது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் நிச்சயம் உங்கள் நம்பிக்கை என்றும் வீண் போகாது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Scaloni’s reaction on Messi’s first goal
— All About Argentina ??? (@AlbicelesteTalk) December 13, 2022
pic.twitter.com/7Owhq5WeWe