மெஸ்ஸியின் ஆட்டத்தை ரசித்த மனைவி - வைரலாகும் புகைப்படம்...!
குரோஷியாவை வீழ்த்திய அர்ஜென்டினா -
நேற்று நள்ளிரவு லுசைஸ் ஐகானிக் மைதானத்தில் முதலாவது அரைஇறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த இரு அணிகளும் பயங்கரமான பலத்துடன் மல்லுக்கட்டி விளையாடின. இதனால் களத்தில் அனல் பறந்தது.
இந்த பரப்பான ஆட்டத்தில் முதல் பாதியில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி போட்டியின் 34-வது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். வீரர் ஜூலியன் அல்வாரஸ் 2 கோலை அடித்து ரசிகர்களை மகிழ்ச்சிக்கு கொண்டுச் சென்றார்.
நேற்று நள்ளிரவில் நடைபெற்ற அரைஇறுதிப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி மாபெரும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.
இந்நிலையில், உலகக் கோப்பையில் இதுவரை 5 கோல்கள் அடித் லியோனல் மெஸ்ஸி சாதனைப்படைத்துள்ளார். தற்போது லியோனஸ் மெஸ்ஸிக்கு உலக மக்கள் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மெஸ்ஸியை ரசித்துக் கொண்டிருந்த மனைவி
நேற்று இரவு நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தன் கணவன் கோல் அடித்ததை நெகிழ்ச்சியோடு மெஸ்ஸியின் மனைவி பார்த்து ரசித்துக்கொண்டிருந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Messi's wife Antonela was enjoying the show last night, Argentina ?? pic.twitter.com/k2b81Hr2eK
— Acholi goddd (@sk_bongomin93) December 14, 2022