விமான நிலையங்களில் இனி மலிவு விலையில் உணவு - மத்திய அரசு அதிரடி!
விமான நிலையங்களில் மலிவு விலையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மலிவு விலையில் உணவு
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கொல்கத்தா விமான நிலையத்தின் சுடுதண்ணீர் மற்றும் டீ பையைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு டீயின் விலை 340 ரூபாய் என கூறி விமர்சித்திருந்தார்.
அவருடைய பதிவு மற்றும் பல்வேறு விமான பயணிகளின் புகார்களையும் கணக்கில் எடுத்துக் கொண்ட விமான போக்குவரத்து துறை அமைச்சகம் இது தொடர்பாக அமைச்சர்களுடன் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியுள்ளது.
மத்திய அரசு முடிவு
அதன்மூலம், விமான நிலையங்களில் உணவு மற்றும் குளிர்பானங்களை குறைந்த விலையில் வழங்க பொருளாதார மண்டல விற்பனையகங்களை திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது.
முதல் கட்டமாக புதிதாக கட்டப்பட்டு வரக்கூடிய விமான நிலையங்களில் இந்த மலிவு விலை உணவு விற்பனை நிலையங்கள் திறக்கப்படும்.
மேலும் அத்தகைய கடைகளில் அமர்ந்து உண்பதற்கு இருக்கைகள் இருக்காது. கவுண்டரில் பணத்தை செலுத்தி விட்டு உணவை பெற்றுக் கொண்டு நாம் காத்திருப்பு இடத்தில் சென்று அதனை அருந்தலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.