உங்களுக்கு PCOS பாதிப்பு இருக்கிறதா..?அப்போ இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள் - எச்சரிக்கை!
PCOSபாதிப்பு உள்ள பெண்கள் சாப்பிடக் கூடாத உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
PCOSபாதிப்பு
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்பது, பெண்களுக்கு ஏற்படும் ஒரு ஹார்மோன் கோளாறு ஆகும். இது, கருப்பைகளில் அதிக அளவு ஆண் ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்படுவதால் ஏற்படுகிறது. இதனால், ஒழுங்கற்ற மாதவிடாய், முகப்பரு, உடல் முடி அதிகரிப்பு, மலட்டுத்தன்மை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
உங்களுக்கு PCOS இருந்தால், நீரிழிவு நோய் ஆகியவை இதய நோய் ஆபத்துக்கு வழிவகுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்சுலின் எதிர்ப்பு,உயர் இரத்த அழுத்தம்,நீர்க்கட்டி உருவாகுதல், மன அழுத்தம், பதட்டம், அதிகப்படியான முடி உதிர்தல், தேவையற்ற முடி வளர்ச்சி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில் PCOSபாதிப்பு உள்ள பெண்கள் சாப்பிடக் கூடாத உணவுகள் குறித்து தெரிந்து கொள்ளலாம். வைட் பிரட், பாஸ்தா, அரிசி மற்றும் பேக்கேஜ்டு சீரில்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் இனிப்புகள், பேஸ்ட்ரிகள், சோடாக்கள்,பால், சீஸ் மற்றும் தயிர் ,கோதுமை, பார்லி மற்றும் கம்பு அதிகப்படியான சர்க்கரை இன்சுலின் அளவை சீர்குலைந்து PCOS அறிகுறிகளை மோசமாக்குகிறது.
சாப்பிடக் கூடாத உணவுகள்
மேலும் பிரஞ்சு ஃபிரைஸ், சிப்ஸ் மற்றும் வறுத்த கோழி,பன்றி இறைச்சி மற்றும் ஹாட் டாக் , சாப்பிடுவதால் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக PCOS அறிகுறிகளை மோசமாக்குவதால் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். PCOSக்கு நிரந்தரமான சிகிச்சை இல்லை, ஆனால் பல்வேறு சிகிச்சைகள் உள்ளன.
முழு தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது இன்சுலின் எதிர்ப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. PCOS கொண்ட பெண்கள் தங்கள் உடல்நலத்தை முறையாகக் கண்காணித்து, சிக்கல்களை முன்பே கண்டறிந்து சரியான சிகிச்சையைப் பெறுதல் முக்கியம்.