இதய நோய் அபாயத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க!
இதய நோய் அபாயத்தை குறைக்கும் முக்கிய உணவுகள் குறித்து ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதய நோய் அபாயம்
ஐரோப்பிய ஹார்ட் ஜர்னல் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் CVD ஆபத்தை குறைக்க தேவையான ஆறு முக்கிய உணவுகளை குறிப்பிட்டுள்ளது.
மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இதய நோய் அபாயத்தைக் குறைக்க பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், கொட்டைகள், மீன் மற்றும் முழு கொழுப்புள்ள பால் பொருட்களை சாப்பிடுவது மிகவும் முக்கியமாம்.
உணவுப்பொருட்கள்
மிதமான அளவு முழு தானியங்கள் அல்லது பதப்படுத்தப்படாத இறைச்சிகளைச் சேர்த்து ஆரோக்கியமான உணவை உண்ணலாம். தினசரி இரண்டு முதல் மூன்று பழங்கள் மற்றும் காய்கறிகள், இரண்டு கப் பால் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு பருப்பு வகைகள் மற்றும் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு மீன் ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.