தவறியும் இரவு நேரத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடாதீர்கள்.. ஏன் தெரியுமா?
நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு நிச்சயம் ஒரு நல்ல உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த வகையில் பகல் நேரத்தில் நாம் எப்படி ஆரோக்கியமாக கட்டுப்பாடுடன் உணவை எடுத்துக் கொள்கின்றோமோ, அதேபோல் இரவு நேரங்களில் உணவில் மிகுந்த கட்டுப்பாடு செலுத்த வேண்டும்.
அப்படியாக இரவில் ஒரு குறிப்பிட்ட சில உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.அதைப்பற்றி பார்ப்போம்.
நாம் இரவு நேரங்களில் தவறியும் கீரை, நெல்லிக்காய், கட்டித்தயிர், கஞ்சி, பாகற்காய் இஞ்சி ஆகியவற்றை இரவில் தவிர்த்து விடுவது நமக்கு மிகுந்த நன்மை அளிக்கும்.
மேலும் சாஸ்திர ரீதியாகவும் இந்த உணவுகளை நாம் இரவுகளில் எடுத்துக் கொள்ளும் பொழுது செல்வம் தாங்காது என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல் தக்காளியில் அசிடிட்டியை ஏற்படுத்தக்கூடிய அமிலங்கள் அதிகமாக இருப்பதால் இரவில் அதை தவிர்ப்பது நல்லது.

சிலர் இரவு நேரங்களில்ஐஸ்கிரீம் விரும்பி எடுத்துக் கொள்வதை நாம் பார்க்கலாம். ஆனால் உண்மையில் இரவு நேரங்களில் நாம் ஐஸ்கிரீம் சாப்பிடும் பொழுது நம் மன அழுத்த ஹார்மோன்களை அவை அதிகரிக்கிறது.
இதனால் இரவு தூங்குவதற்கு சிரமம் உண்டாகும். அதேபோல் கிரீன் டீ காபி மற்றும் டீயை விட அதிக அமிலம் இருப்பதால் இரவில் குடிக்கும் பொழுது அதிக இதய துடிப்பு பதட்டம் மற்றும் கவலை ஆகியவை ஏற்படலாம். பழங்கள் வகை என்று பார்க்கும் பொழுது இரவுகளில் ஆரஞ்சு மற்றும் திராட்சை பழம் போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்கள் நெஞ்செரிச்சலை அதிகரிக்கும்.

அதனால் இரவு நேரத்தில் சிட்ரஸ் நிறைந்த பழங்கள் தவிர்ப்பது நல்லது. அதேபோல் வெங்காயம் இரவில் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். வெங்காயத்தில் அதிக ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் அது இரவில் சாப்பிடுவது உகந்தது அல்ல என்று சொல்லப்படுகிறது.
முடிந்தவரை இரவு நேரங்களில் காரமான உணவுகள் எடுத்துக் கொள்வதையும் தவிர்க்கலாம் இதனால் அஜீரண கோளாறுகள் நெஞ்செரிச்சல் உண்டாகும். அதனால் நம் தூக்கம் பாதிக்கப்படலாம். அதே போல், கொழுப்பு சத்துக்கள் நிறைந்த பீட்சா, பர்க்கர், எண்ணெயில் பொறிக்கப்பட்ட ஸ்னாக்ஸ்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.