வீணான உணவு...அண்டா அண்டாவாக கீழே கொட்டப்பட்ட அவலம்..அதிமுக மாநாட்டில் அதிர்ச்சி
சரியான முறையில் சமைக்கப்படாத நிலையில், அதிமுக மாநாட்டில் தயார் செய்யப்பட்ட சாப்பாடு அண்டா அண்டாவாக கீழே கொட்டப்பட்டுள்ளது.
அதிமுக மாநில மாநாடு
தென்தமிழகத்தின் மிக முக்கிய பகுதியான மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. பெரும் விமர்சையாக நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த தொண்டர்கள் அனைவருக்கும் சாப்பாடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான வேலையை தனியார் கேட்டரிங் சர்விஸ் நிறுவனத்திடம் அளிக்கப்பட்டிருந்தது. மிக பெரிய மனித உழைப்பில் உருவாக்கப்பட்ட இந்த சாப்பாடு நேற்று தொண்டர்களுக்கு பரிமாறப்பட்டது.
அண்டா அண்டா கீழே கொட்டப்பட்டது
சாப்பாடு சரியான முறையில் சமைக்கப்படாத நிலையில், மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள் பலரும் அதனை அங்கேயே கீழே வீசி சென்றுள்ளனர். வெரைட்டி ரைஸ் சமைக்கப்பட்ட நிலையில் எதுவுமே சுவையாக இல்லாத நிலையில், முற்றிலுமாக கீழே வீசப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மாநாட்டிற்கு வந்த அதிமுக தொண்டர்கள் பெரும்பாலானவர்கள் மாலையிலே ஊர் திரும்பியதால் அவர்களுக்காக தயாரிக்கப்பட்ட புளியோதரை அண்டா அண்டாவாக மிச்சமானது. அதன் காரணமாக மாநாட்டு திடலில் மிச்சமான உணவுகள் டன் கணக்கில் கீழே கொட்டப்பட்டது. இந்த தொடர்பான செய்திகள் வெளியாகி பெரும் விமர்சனங்களை தற்போது பெற்றுள்ளது.