நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மிளகு குழம்பு; ருசியாக செய்வது எப்படி?

Food Tamilnadu Dish
By Thahir Jun 29, 2021 11:44 AM GMT
Thahir

Thahir

in உணவு
Report
458 Shares

பண்டைய கால மசாலா பொருட்களின் பட்டியலில் மிளகு-க்கென தனி இடம் உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மிளகில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன. தவிர, நம்முடைய அன்றாட உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய பொருட்களில் ஒன்றாகவும் மிளகு உள்ளது.

மிளகில் செய்யப்பட்ட ரசம் கண்டிப்பாக நாம் அனைவரும் சாப்பிட்டு இருப்போம். இருப்பினும், மிளகு குழம்பு பற்றி பெரும்பாலும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சிலர் மிளகு குழம்பு செய்ய நிறைய நேரம் செலவாகும், பல பொருட்களை சேர்க்க வேண்டும் என எண்ணுகிறார்கள். ஆனால் இந்த வகை மிளகு குழம்பு செய்வது மிகவும் எளிமையானது. மேலும், எந்தக் காய்கறிகளும் தேவையில்லை. அதோடு செலவும் மிச்சம்.

இப்படிபட்ட மிளகு குழம்பை மிகவும் எளிமையாகவும், சுவையாகவும் எப்படிச் செய்வது என்று இங்கு பார்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மிளகு குழம்பு; ருசியாக செய்வது எப்படி? | Food Tamilnadu Dish

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – 50 கிராம்,

பூண்டு – 15 பற்கள்,

புளி – 1 எலுமிச்சை அளவு,

உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு

மல்லி (தனியா)- 3 டேபிள் ஸ்பூன்,

உளுந்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்,

கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்,

மிளகு – 2 டேபிள் ஸ்பூன்,

பச்சரிசி – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு

நல்லெண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன்,

கடுகு – 1 டீ ஸ்பூன்,

சீரகம் – 1 டீ ஸ்பூன்,

வெந்தயம் – 1/4 டீ ஸ்பூன்,

கருவேப்பிலை – சிறிதளவு 

நீங்கள் செய்ய வேண்டியவை முதலில் குழம்பு செய்யத் தேவையான அளவு புளியை தண்ணீர் கரைத்துக் கொள்ளவும். பிறகு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இப்போது, ஒரு பாத்திரம் எடுத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து அரைப்பதற்கு என கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மிதமான தீயில் பொன்னறிமாக வறுக்கவும். பிறகு அவை நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளவும்.

பின்னர், அதே பாத்திரத்தில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். அதன்பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறவும். தொடர்ந்து முன்னர் கரைத்து வைத்துள்ள புளிக் கரைசலை ஊற்றி, தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி உப்பு சேர்த்து 20 நிமிடங்களுக்கு மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும்.

இதற்கிடையில், மற்றொரு அடுப்பில் ஒரு சிறிய பாத்திரம் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.

[8WHSJJ ]

இப்போது அவற்றை கொதித்துக் கொண்டிருக்கும் குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கினால், நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த மிளகு குழம்பு தயாராக இருக்கும்.