கூல்ட்ரிங் குடித்து சிறுமி உயிரிழப்பு - பிரபல குளிர்பான ஆலையில் திடீர் ஆய்வு!
திருவண்ணாமலையில் ₹10 பாட்டில் கூல்ட்ரிங் குடித்து சிறுமி உயிரிழந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணமலை
திருவண்ணமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் 5 வயது மகள் காவியா ஸ்ரீ . கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தினம் வீட்டின் அருகேயுள்ள பெட்டிக்கடையில் 10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் ஒன்றை குடித்த சிறுது நேரத்திலேயேமூச்சுத்திணறல் ஏற்பட்டு, மூக்கிலும் வாயிலும் நுரை தள்ளி மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து பெற்றோர் சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஆய்வு
இதனை தொடர்ந்து கூல்ட்ரிங்ஸில் அதிக அளவு நச்சு பொருள் இருப்பதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு தனது குழந்தை உயிரிழந்ததாக ராஜ்குமார் திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் திருவண்ணாமலை சிறுமி குடித்த Dailee குளிர்பான ஆலையின் கிளை நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செயல்பட்டு வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதன் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.