உணவருந்திய 6 பேர் வாந்தி; ப்ரீஸர் பாக்சில் கரப்பான் பூச்சி - சாம்பாரில் மிதந்த கவர்...அதிர்ந்து போன அதிகாரிகள்!
Tamil nadu
Chennai
By Jiyath
சென்னை தியாகராய நகரில் உள்ள விருதுநகர் அய்யனார் உணவகத்தில் உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதிகாரிகள் ஆய்வு
சென்னை தியாகராயர் நகரில் விருதுநகர் அய்யனார் என்ற உணவகம் உள்ளது. அங்கு அசைவ உணவு அருந்த சென்ற 6 பேர் உணவருந்திய பின்னர் வாந்தியெடுத்துள்ளனர்.
இந்நிலையில் டாக்டர் சதீஷ் குமார் தலைமையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ப்ரீஸர் பாக்சில் கரப்பான் பூச்சி
உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த சாம்பார் அண்டாவில் பாலித்தீன் கவர் கிடந்துள்ளது. உணவகத்தில் இருந்த ப்ரீஸர் பாக்ஸை அதிகாரிகள் திறந்து பார்த்தபோது துர்நாற்றம் வீசியுள்ளது. பாக்சில் உள்ளே கெட்டுப்போன இறைச்சிகள் இருந்துள்ளது. மேலும் அந்த பாக்சில் உள்ளே கரப்பான் பூச்சிகளும் இருந்துள்ளது.