ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு - உணவுப் பாதுகாப்புத் துறை

Tamil nadu Ice Cream
By Vinoja Apr 30, 2026 03:18 PM GMT
Report

கோடை வெயில் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறை ஐஸ்கிரீம் உற்பத்தி நிறுவனங்களுக்கும், விற்பனை நிலையங்களுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெயிலுக்கு இதமாக ஜில்லுன்னு ஒரு ஜூஸ் குடித்தால், ஐஸ்கிரீம் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கலாம்.ஆனால், அதில் கலப்படம் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. கலப்படம் என்பது மெல்ல கொல்லும் விஷம்.

ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு - உணவுப் பாதுகாப்புத் துறை | Food Safety Department Ice Cream Surveillance

எனவே இதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனங்களில் தொடர் சோதனைகளை மேற்கொள்ள உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விதிகளை மீறும் நிறுவனங்கள் அல்லது கலப்படத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம், உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிவிப்பில், ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பான உற்பத்தி நிலையங்களில் தொடர்ந்து சோதனை நடத்த வேண்டும் என மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செயற்கை நிறமிகள், அதிக சுவையூட்டிகள் மற்றும் தரமற்ற வேதிப்பொருட்கள் கலப்பதை தவிர்க்கும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.