பூஞ்சை பிடித்த சிக்கன்..தொடர் வாந்தி மயக்கம் ..தனியார் உணவகத்தில் அதிர்ச்சி..!
சென்னை தனியார் உணவகத்தில் சாப்பிட பொதுமக்கள் வாந்தி மயக்கத்தில் அவதியுற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Barbecue
தற்போது நகர்ப்புற கலாச்சாரத்தில், Barbecue பெரும் வரவேற்பை மக்களிடம் பெற்று வருகின்றது. யூடியூப் தளங்களிலும் நிறையவே உணவு ரிவியூ செய்பவர்கள் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் ஒவ்வொரு பகுதியிலும் நிச்சயமாக ஒரு barbecue இடம்பெற துவங்கிவிட்டது.
அப்படி சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் அமைந்துள்ளது பிரபலமான barbecue உணவகம். இந்த உணவகத்தில் 800 ரூபாய்க்கு ஒரு நபருக்கு அன்லிமிடெட் உணவு வகைகள் பரிமாறப்படுகிறது.
வாந்தி
பெரும் பிரபலமான இந்த உணவகத்தில் பெருங்களத்தூரை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட உணவு booking செய்துள்ளனர். சைவம், அசைவும் சாப்பாடுகளை பலரும் கலந்து உட்கொள்ள அதில் அசைவம் சாப்பிட்டவர்கள் மட்டும் வாந்தி எடுத்து மயக்கமடைந்துள்ளனர்.
இதனால் அதிரிச்சியடைந்த உடன் வந்திருந்தவர்கள், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்மந்தப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், விரைந்த உணவு பாதுகாப்பு பிரிவினர், சோதனை மேற்கொண்டதால், உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.