"கர்நாடக கல்லூரியில் நடக்கும் பிரச்சினைக்கு பாஜக தான் காரணம்" - உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி
கர்நாடக கல்லூரியில் நடக்கும் பிரச்சனைக்கு பாஜக தான் காரணம் என கூத்தாநல்லூரில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி குற்றச்சாட்டினார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி கட்சி சார்பில் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன் , திருத்துறைப்பூண்டி மாரிமுத்து உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் பேசிய உணவுத்துறை அமைச்சர், திமுக அரசு கூத்தாநல்லூரில் உள்ள 24 வார்டுகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறவேண்டும்.
கர்நாடகத்தில் கல்லூரியில் நடக்கும் பிரச்சனைக்கு பிஜேபி தான் காரணம். தமிழகத்தில் உள்ள எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனத்தை தெரிவித்து இருக்கவேண்டும்.
கல்லூரி மாணவர்களுக்கு இடையே பாஜக அரசு மதசாயத்தை திணித்து வருவதாக குற்றம்சாட்டினார்
அதனைதொடர்ந்து மதசார்பற்ற கூட்டணியின் தேர்தல் பிரச்சார பாடல்கள் அடங்கிய சிடியை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி துவங்கி வைத்தார்.