ஜி 20 மாநாடு....தடபுடலான விருந்து..தங்க தட்டில் தினை வகை உணவுகள்..!!
ஜி 20 மாநாடு இன்று இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் ஏற்பாடுகள் படுஜோராக நடைபெற்றுள்ளது.
ஜி 20 மாநாடு
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்திய ஜி 20 கூட்டமைப்பிற்கு தலைமை தாங்க துவங்கிய முதல், பல ஜி 20 மாநாடு இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஜி20 உச்சி மாநாடு இன்று துவங்கி நாளை வரை இரண்டு தினங்களுக்கு நாட்டின் தலைநகர் தில்லியில் அமைந்துள்ள பிரகதி மைதானமண்டபத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த மாநாட்டில் உலகின் முக்கிய நாடுகளின் தலைவர்களான அமெரிக்கா, இங்கிலாந்து,கனடா, ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர்கள் பங்கேற்கவுள்ளனர். தெற்காசியாவில் நடைபெறும் முதல் இந்நிலையில் ஜி20 உச்சி மாநாடு இது என்பதில் இதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு மிகவும் கவனமுடன் செய்து வருகிறது.
உணவு பட்டியல்
இதற்கிடையில், இந்த மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு உணவை பரிமாற வெள்ளி, தங்க முலாம் பூசப்பபட்ட பாத்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் ஜெய்பூரில் இருந்து தட்டு டம்ளர் ஜாடி என மொத்தம் 15 ஆயிரம் வெள்ளி பாத்திரங்கள் தில்லிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த மாநாட்டில் பரிமாறப்படப்போகின்றன உணவின் பட்டியலும் கவனம் பெற்றுள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு தினை ஆண்டாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த உணவு பட்டியலில் தினை உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தினை தாலி, ராஜஸ்தானின் தால்பாடி சுர்மா, தென் இந்திய மசாலா தோசை, பெங்காலி ரசகுல்லா, பீகாரின் லிட்டி சோக்கா போன்றவை பரிமாறப்படவுள்ளன.
இது தவிர பானிபூரி, சட்பதி சாட், தஹிபல்லா, சமோசா, பிரட் பகோரா, பேல்பூரி, வடபாவ் போன்ற உணவுகளும் தயார் செய்யப்படுகின்றன. ஆனால் இந்த உணவு பட்டியலில் அசைவ உணவு சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.