இதை சாப்பிட்டால் ஆண்களுக்கு பாலுணர்வு மேலோங்கும்- இப்படி ட்ரை பண்ணுங்க..
தாமரை விதைகளை சாப்பிடுவதால் பெரிய அளவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான பக்கவிளைவுகள் எதுவும் இல்லை.
பாலுணர்வு
நம் உடல் ஆரோக்கியத்திற்கு முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் உலர் பழங்கள், உலர் விதைகளைச் சாப்பிடுவது நல்லது என்று நமக்குத் தெரியும். அதுபோல தாமரைப் பூவிலிருந்து விதைகளைச் சாப்பிட்டாலும் நமக்கு எண்ணற்ற பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பாலியல் உறவில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் தாமரை விதைகளைத் தினசரி 2 அல்லது 4 முறை சாப்பிட்டால் ஒரு ஆணுக்குக் குதிரைக்கு நிகரான பலம் கிடைக்குமாம்.தாமரை விதைகளை நேரடியாகவும் சாப்பிடலாம் அல்லது வறுத்து, இனிப்பு சேர்த்தும் சாப்பிடலாம்.
குறிப்பாகத் தாமரை விதைகளில் மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைவாகக் கிடைக்கின்றன.இதைச் சாப்பிடும் ஆண்களுக்குப் பாலுணர்வு மேலோங்கும் மற்றும் அதிக சக்தியுடன் செயல்படுவார்கள்.
தாமரை விதைகளில் பி காம்ப்ளக்ஸ், விட்டமின் கே போன்ற சத்துக்களும் உள்ளது.
தாமரை விதை
மேலும் தசைப்பிடிப்பு அல்லது தசைவலி போன்ற பிரச்சனைகளால் பாதிப்பு இருப்பவர்கள் தாமரை விதைகளைச் சாப்பிடலாம். தாமரை விதைகளை சாப்பிடுவதால் பெரிய அளவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான பக்கவிளைவுகள் எதுவும் இல்லை.
குறிப்பாகக் குழந்தைகளுக்குத் தாமரை விதைகளைக் கொடுத்தால் அவர்களுடைய தசைகள் வேகமாக வளர்ச்சி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.