தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன் - தமிழகத்தில் இருந்து இலங்கை மக்களுக்கு செல்லும் உணவு பொருட்கள்..!
தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி,பருப்பு.பால் பவுடர் உள்ளிட்ட உணவு பொருட்கள் பேக் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் என்று அச்சிடப்பட்டுள்ள பைகளில் இந்திய அரசு முத்திரையுடன் பொருட்கள் அடங்கிய பைகள் பேக் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மே 22-ந் தேதிக்கு பிறகு சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு பொருட்கள் அனுப்பப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து பொருட்களை அனுப்பி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.123 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் டன் அரிசி ரூ.15 கோடி மதிப்பிலான பால் பவுடர் மற்றும் மருத்துவப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.