மட்டன் பிரியாணி முதல் .. விருதுநகர் பரேட்டா வரை ! - தடபுடலாக நடக்கும் திமுக பொதுக்குழு
திமுக பொதுக்குழு கூட்டத்தில், திமுக தலைவராக முக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். திமுகவின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி. அறிவிக்கப்பட்டார்.
திமுக பொதுக் குழு கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ளவர்களுக்கு வழங்க அறுசுவை உணவு தயார் செய்யப்பட்டுள்ளது.
முதலாவதாக
அசைவம் :
ஆற்காடு மக்கன் பேடா
மட்டன் பிரியாணி
முட்டை
கத்தரிக்காய் பச்சடி
தயிர் பச்சடி
ரசம் பாத்
உருளை வறுவல்
பகாளாபாத்
ஆரஞ்சு ஐஸ்கிரீம்
கல்கத்தா ஸ்வீட் பீடா
வாழைப்பழம்
வாட்டர் பாட்டில்
கூட்டத்திற்கு வருபவர்கள் சைவ உணவினை விரும்பினால் அவர்களுக்கான மெனு
[LOXF7V;
சைவம்
ஸ்பெசல் திருவையாறு அசோகா அல்வா
கேரளா பாலாடை பிரதமன்
ஊட்டி கத்தரிக்காய் சாப்ஸ்
வெள்ளரி கேரட் மாதுளம் தயிர் பச்சடி
சப்பாத்தி
விருதுநகர் காயின் பரேட்டா
நவரத்தின வெஜிடபிள் குருமா
கடலக்கறி வெஜிடபிள் சால்னா
பலாக்காய் பிரியாணி
சின்ன வெங்காயம் அரைத்துவிட்ட உள்ளி தீயல் சாதம்
கேரளா நெய் சாதம்
லெமன் சாதம்
தூதுவளை ரசம் சாதம்
சென்னை அமைந்தகரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் நிலையில், ஆங்காங்கே போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. EVR சாலையில் அண்ணா வளைவு முதல் ஈகா சந்திப்பு வரை இலகுரக & கனரக வாகனங்கள் பயணிக்க தடை. EVR சாலைக்கு பதில் அண்ணா நகர் ரவுண்டானா, புது ஆவடி சாலை, கீழ்ப்பாக்கம் தோட்டச் சாலை வழியை பயன்படுத்தலாம் மறுமார்க்கத்தில் குருசாமி பாலம், ஸ்டெர்லிங் சாலை வழியை பயன்படுத்தலாம்.
பொதுக்குழு கூட்டத்துக்கு வரும் முதலமைச்சருக்கு ஈகா சந்திப்பு முதல் அமைந்தகரை வரை 6 இடங்களில் வரவேற்பு பாரம்பரிய கலைகளான தப்பாட்டம், மயிலாட்டத்துடன் உற்சாக வரவேற்பு.
பொதுக்குழு கூட்டம் காரணமாக ஆழ்வார்ப்பேட்டை முதலமைச்சர் இல்லம் முதல் அமைந்தகரை வரை சாலையில் இருபுறத்திலும் நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளார்கள்.