யாரெல்லாம் கொத்தவரங்காய் சாப்பிடக்கூடாது தெரியுமா...?
கொத்தவரங்காய் புரதம், வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்றவற்றை அதிகமாக கொண்டுள்ளது. வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இதில் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.
கொத்தவரங்காய் குறிப்பிடத்தக்க அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் ஏ உங்களின் கண்பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. கொத்தவரங்காயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் வயிற்று புண்களில் இருந்து பாதுகாக்க உதவும்.
கொத்தவரங்காய் சாப்பிட்டுவர எலும்பு மற்றும் பற்கள் உறுதிப்படும் . பித்தமயக்கம் ஏற்படுவதை தடுக்கும் மாலைக்கண் நோயை குணப்படுத்தும். கொத்தவரங்காயில் காணப்படும் அதிக அளவிளான நார்ச்சத்து இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். கொத்தவரங்காய் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்காது.
எனவே, நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுவதற்கு கொத்தவரங்காய் ஒரு சக்திவாய்ந்த வழியாகும். யார் சாப்பிடக்கூடாது ? வாதம் மற்றும் பித்தம் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை இது மேலும் அதிகப்படுத்தும்.
கொத்தவரங்காய்க்கு எப்பொழுதும் நோய் தீர்க்கும் தன்மையானது குறைவு. பத்தியம் இருந்து சாப்பிடுவோர் கொத்தவரங்காயை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் பத்தியம் முறிவு உண்டாகும் எடுத்துக்கொண்ட மருந்து வேலை செய்யாமல் போகும்.