பாகிஸ்தானில் தொடரும் உணவு பஞ்சம் - கோதுமை மாவுக்காக சண்டையிடும் மக்கள்
பாகிஸ்தானில் தொடரும் உணவு பஞ்சம் காரணமாக கோதுமை மாவுக்காக சண்டையிட்டுக் கொள்ளும் காட்சி வைரலாகி வருகிறது.
மோசமான நிலையில் பாகிஸ்தான்
கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் இன்னில் சிக்கி தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதே போன்று கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது பாகிஸ்தான். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியை சந்திக்க தொடங்கி உள்ளது.
கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி நீடித்தாலும் தற்போது நிலைமை இன்னும் மேசமான நிலைக்கு சென்றுள்ளது.
கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி நீடித்தாலும் தற்போது நிலைமை இன்னும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது.
பாகிஸ்தான் பிடிஐ கட்சியின் தலைவரான இம்ரான் கான் பிரதமராக இருந்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறிய நிலையில் இவரது ஆட்சி கவிழ்ந்தது.
இதையடுத்து புதிய புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (பிஎம்எல்-என் ) கட்சி தலைவரான ஷெபாஸ் ஷெரீப் தேர்வாகி உள்ளார்.
இவர் பிரதமராக பதவியேற்ற பின் இவருக்கு இருக்கும் பெரிய சவால் என்னவென்றால் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பது தான்.
உணவுக்காக சண்டையிடும் மக்கள்
நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்தவும், அந்நிய செலாவணி கையிருப்பு கரைவதை தடுக்கவும் அவரது அரசு எடுத்த நடவடிக்கைகளை என்பது பெரியளவில் கைக்கொடுக்கவில்லை.
இந்நிலையில் தான் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வரும் நிலையில் பணவீக்கத்தால நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
சிலிண்டர் எரிவாயு பற்றாக்குறையால் பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளில் சமையல் எரிவாயு நிரப்பி செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனிடையே தற்போது உணவு பற்றாக்குறை என்பதும் அதிகரித்துள்ளது. மக்கள் ஒரு வேளை உணவுக்கு கூட இல்லாமல் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வீடியோக்களில் மக்கள் கோதுமை மாவு மூட்டைகளுக்காக ஒருவரை ஒருவர் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
Pakistan में ये लड़ाई…ये झगड़ा…ये दंगे जैसे हालात आटे की बोरी के लिए हो रहे हैं…#PakistanEconomy #Pakistan pic.twitter.com/EzoI2LoSc9
— Jyot Jeet (@activistjyot) January 9, 2023