கமகம உணவு..தடபுடலாக தயாரான காலை மெனு...களைக்கட்டும் அதிமுக மாநாடு

ADMK Madurai Edappadi K. Palaniswami
By Karthick Aug 20, 2023 05:09 AM GMT
Report

 அதிமுகவின் மாநாட்டை எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி துவங்கி வைத்துள்ள நிலையில், மாநாட்டில் தொண்டர்களுக்கான தயாரான உணவு மெனுக்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக மாநாடு 

எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பயணத்தில் மிக முக்கியமான பகுதியாக கருதப்படும் அதிமுகவின் மாநில மாநாடு மதுரை வலையங்குளத்தில் துவங்கியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் படைசூழ கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி துவங்கி வைத்தார்.

food-being-served-in-admk-maanadu

கமகம சாப்பாடு  

இந்த மாநாட்டில் கட்சியின் தொண்டர்கள் லட்சக்கணக்கில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வரும் அனைவரும் உணவளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சில நாட்களாகவே நடைபெற்று வரும் நிலையில், இன்றைக்கு முழுவதும் அதாவது காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் உணவு வழங்கப்படவுள்ளது.

food-being-served-in-admk-maanadu

வருவோர்க்கு இடைஞ்சல் இல்லாமல் உணவு வழங்க 3 கவுண்டர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், சப்பாத்தி, பூரி, பொங்கல் போன்ற டிபன் வழங்க மட்டும் தனியாக கவுண்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

அதே போல இந்த மெனுவில் புளிசாதம், தயிர் சாதம், பிரிஞ்சி சாதம், சாம்பார் சாதம் என பலவகையான வெரைட்டி சாப்பாடு தயார் செய்யப்பட்டுள்ளது.