தினமும் சாமி கும்பிடும்போது.. முழு பலன் பெற.. இந்த 3 விஷயத்தை அவசியம் செய்யுங்க!
சாமி கும்பிடும்போது கடைப்பிடிக்க வேண்டிய 3 விஷயங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.
சாமி
நாம் கடவுளை வழிப்படுவதற்குக்கும், கர்ம வினைகளுக்கு பெரிய தொடர்பு இருக்கிறது என்றால் நம்ப முடியுமா? அதாவது, கடவுளை தூய மனதுடன் வழி பட முடியவில்லை, வீட்டில் பூஜை செய்ய முடியவில்லை, மந்திரங்களை உச்சரிக்க முடியவில்லை என்றால் இதுபோன்ற சங்கடங்களுக்கு கர்ம வினைதான் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த வினைகளை மாற்ற வேண்டும் என்று நினைத்தால் அதற்கு ஒரே பரிகாரணம் நித்தமும் கடவுளை வணங்குவதுதான். எவ்வளவு தடைகள் வந்தாலும் கடவுளை பூஜிப்பது அவசியம். இது வாழ்க்கையில் அளவில்லா இன்பத்தை அள்ளி கொடுக்கும்.
இந்த நிலையில், வீட்டில் கடவுளுக்கு பூஜை செய்யும்போது இந்த 3 விஷயங்களை கடைப்பிடிப்பது முக்கியம். முன்னோர்கள் இறைவனை ஒரு நாள் வழிபடவில்லை என்றாலும் அன்றைய நாள் முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருப்பார்களாம். இறைவனை ஆராதனை செய்த பிறகு தான் உண்ணுவார்களாம்.
3 விஷயம்
இன்றைய கலியுகத்தில் அதெல்லாம் மாறிவிட்டது. வழிபட்ட பின்புதான் சாப்பிட வேண்டும் என்றால் பலர் பட்டியாக இருக்கனும். இதற்காகத்தான் எளிமையான முறை கடைபிடிக்கப்படுகிறது. அதாவது, குளித்த பின் இஷ்ட தெய்வத்தை மனத்தில் நினைத்துக்கொண்டு மூன்று முறை பெயரை சொன்னால் போதுமானது.
அதற்கு பின் சாப்பிடும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். இதனால் அன்றைய நாள் உங்களுக்கு நல்லவிதமாக அமையும். உங்க இஷ்ட தெய்வம் துணை நிற்பார். கை , வாய் , மனது இந்த மூன்றையும் ஒருநிலைப்படுத்துவதே பூஜைக்கான முக்கிய விதியாகும்.
இறைவனை வழிபடும்போது உங்கள் கைகளால் புஷ்பங்களை தூவி, வாய் முழுக்க கடவுளின் நாம மந்திரங்களை பாட, மனதை தூய எண்ணங்களோடு ஒருநிலைப்படுத்தி வழிப்பட வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே வழிபாட்டின் முழு பலனையும் பெற முடியும் என்று சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.