அதிமுக பிரச்சனையில் தலையிட்டு குளிர்காய விரும்பவில்லை : சபாநாயகர் அப்பாவு

ADMK DMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Irumporai 1 மாதம் முன்

அதிமுக உட்கட்சி பிரச்சினையில் தலையிட்டு குளிர்காய விரும்பலவில்லை என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

அப்பாவு

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திறப்பு விழாவின் விவரங்களை சட்டப்பேர்வையின் இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

அதிமுக பிரச்சனையில் தலையிட்டு குளிர்காய விரும்பவில்லை : சபாநாயகர் அப்பாவு | Fmnkcvfbcfk

குளிர்காய விரும்பவில்லை

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு : அதிமுக உட்கட்சி பிரச்சினை அவசரமான பிரச்சினை அல்ல ,சட்டமன்றம் வேறு நீதி மன்றம் வேறு என்று கூறிய அப்பாவு ஓபிஎஸ் ஈபிஎஸ் கடிதங்கள் குறித்து ஜனநாயக முறைப்படி நடவடிக்கை இருக்கும் என அப்பாவு கூறினார்.

மேலும் அதிமுகவில் நான்கு பிரிவாக உள்ளனர் ஆகவே அவர்கள் பிரச்சினையில் தலையிட்டு குளிர்காய விரும்பவில்லை என அப்பாவு கூறினார்.