கமல் ஹாசன் வாகனத்தை சோதனையிட்ட பறக்கும் படையினர்
கமல் ஹாசன் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வாகன சோதனை நடத்தி வாகனங்களில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்து சென்றால் பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பயணித்த பிரசார வாகனத்தை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற கமல்ஹாசனின் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்