கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துகுலுங்கும் வண்ண மலர்கள்
கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் பூத்துகுலுங்கும் வண்ண மலர்கள் காண்பவர் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் காட்சியளிக்கிறது.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில் பிரையண்ட் பூங்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் 59வது மலர் கண்காட்சிகாக லட்சக்கணக்கான மலர் செடிகளை நடவு செய்து பராமரிக்கப்பட்டு வந்தது.
கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாப்பயணிகள் வராததால் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மலர்கண்காட்சி நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது பிரையண்ட் பூங்காவில் பெட்டூனியா , டெல்பீனியம் , ரானன்குலஸ், மேரிகோல்டு, ஆஸ்டர், கேலண்டுல்லாஜினியா , டயான்தஸ், பெட்டூனியா கோலியஸ் , ஆண்ட்ரியம், டெல்பினியம், ஆப்ரிகன் மேரி போன்ற மலர்கள் தற்போது 1 கோடிக்கும் மேலாக வண்ண வண்ண நிறத்தில் பூத்து குலுங்குகின்றது. மேலும் அங்கு அடிக்கடி பெய்து வரும் மழையின் காரணமாக பூங்காவில் உள்ள மலர்கள் கண்ணை கவரும் விதத்தில் வண்ண வண்ண நிறங்களில் காட்சியளிப்பது பார்ப்பதற்கே ரம்மியமாக உள்ளது.