உதகையில் 124-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
உதகையில் 124-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமான ஊட்டிக்கு பிற மாவட்டங்களில் இருந்தும்,வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றன.
ஆண்டு தோறும் மே மாதம் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றன. அவர்களை கவரும் விதமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆன்லைன் வாயிலாக கண்காட்சி நடந்தது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகாமானோர் ஊட்டி வந்து செல்கின்றனர்.
இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 124-வது மலர் கண்காட்சி 20-ந் தேதி இன்று முதல் வருகிற 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.