சென்னை கலைவாணர் அரங்கில் நாளை மலர் கண்காட்சி - பொதுமக்களுக்கு கட்டணம் நிர்ணயம்
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சமீபத்தில் சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, நாளை ஜூன் 3-ம் தேதி கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.
மேலும், முன்னாள் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளில் சென்னையில் மலர் கண்காட்சிக்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், நாளை சென்னை கலைவாணர் அரங்கில் நாளை மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
நாளை நடைபெறும் மலர் கண்காட்சியை தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். தொடங்கி வைக்கிறார். இந்த மலர் கண்காட்சி ஜூன் 3-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மலர் கண்காட்சியை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். நுழைவுக் கட்டணம் மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு ரூ.20, பெரியவர்களுக்கு ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சிக்காக ஊட்டி, குன்னூர், பெங்களூர் உள்பட பல மாநிலங்களிலிருந்து வண்ண வண்ண மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.