10 அடி ஏலியன் வந்தது உண்மை தானா..? போலீசார் தந்த ரிப்போட்டால் அதிர்ச்சியில் மக்கள் ..!

Police spokesman United States of America
By Karthick Jan 09, 2024 05:34 AM GMT
Report

மியாமி மாலில் ஏலியங்கள் வந்ததாக கூறப்படும் நிலையில், அது குறித்து புளோரிடா காவல் துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

ஏலியன்  

இன்றளவும் விஞ்ஞான உலகில் பெரும் ஆராய்வதை தூண்டும் விஷயமாக இருப்பது ஏலியன் குறித்தான ஆராய்ச்சிகள். பூமியில் வாழ்வது போல மற்ற கிரகங்களிலும் மனிதர்கள் வாழ்கிறார்களா..? என்ற கேள்விக்கு இன்றும் பதில் இல்லை.

florida-police-clarification-in-miami-alien-visit

ஆனால், அவ்வப்போது ஏலியன்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றது. அந்த இடத்தில் ஏலியன்கள் இருக்கின்றனர், இங்கே வந்து சென்றனர் என்றெல்லாம் அவ்வப்போது தொடர்ந்து செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும்.   

போலீசார் விளக்கம்

 அந்த வகையில், தான் அண்மையில் மியாமி பகுதியில் அமைந்துள்ள மால் ஒன்றில் ஏலியன்கள் வந்து சென்றதாக தகவல் வெளியாகி உலகம் முழுவதும் காட்டு தீ போல பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

florida-police-clarification-in-miami-alien-visit

இது குறித்து விளக்கமளித்துள்ள புளோரிடா காவல் துறையினர்ஏலியன் வருகை எல்லாமே சில விஷமிகள் கிளப்பிவிட்ட வதந்தி என்றும், சிறுவர்கள் சிலர் பட்டாசு வெடித்ததாகவும் இதனால் ஏற்பட்ட வெளிச்சத்தை வைத்து ஏலியன்கள் புகுந்ததாக செய்திகள் வெளியானதாக தெரிவித்துள்ளனர்.