நேரில் பார்க்காமல் பக்கத்து அறையிலிருந்தே பெண்ணை கர்ப்பமாக்கிய நபர் - எப்படி சாத்தியம்?
நேரில் பார்க்காமல் பெண்ணை கர்ப்பமாக்கிய வினோத சம்பவம் அமெரிக்கா சிறையில் நடந்துள்ளது.
சிறை கைதி கர்ப்பம்
அமெரிக்கா போன்ற நாடுகளில் பல்வேறு வினோத சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த சம்பவம் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சிறையில் உள்ள பெண் கைதி ஒருவர், அடுத்த அறையில் இருந்த ஆண் கைதியால் கர்ப்பமாகி குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இருவரும் ஒரு முறை கூட நேரில் சந்தித்ததே இல்லையாம்.
ஏசி வென்ட்
டெய்சி லிங்க் என்ற 29 வயதான பெண், கொலைக் குற்றம் ஒன்றுக்காக 2022ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் மியாமியில் உள்ள டர்னர் கில்ஃபோர்ட் நைட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இருக்கும் இவர், கடந்த ஜூலை மாதம் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். சிறையில் யாரையுமே சந்திக்காமல் குழந்தையை பெற்றெடுத்து எப்படி என அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இது தொடர்பாக அவர்களிடம் நடத்திய விசாரணையில், அதே சிறையில் 24 வயதான ஜோன் டெபாஸ் என்ற ஆண் கைதி அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் சிறையின் வேறு அறையில் இருப்பதால் இவர்களால் நேரில் சந்திக்க முடியாது. ஆனாலும் ஏர் கண்டிஷனிங் வென்ட் இருவரது அறைகளை இணைத்துள்ளது. அதன் மூலம் இருவரும் பேசிக்கொள்ள முடிந்தது.
தந்தையாக ஆசை
சிறையின் தனிமையில் தவித்த இருவரும் இதன் மூலம் தினமும் பல மணி நேரம் பேசி பழகியுள்ளனர். அப்படி பேசுகையில், தனக்குத் தந்தையாக வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் சிறையில் உள்ளதால் வாய்ப்பில்லை என டெபாஸ், டெய்சியிடம் புலம்பியுள்ளார்.
டெபாஸ் கூறியதை கேட்டு இரக்கமடைந்த டெய்சி, டெபாஸ் உடன் சேர்ந்து ஒரு திட்டத்தை வகுத்துள்ளார். ஜெயிலின் ஏசி வென்ட் எல் (L) வடிவில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். டெபாஸ் அறையில் இருந்து எதைப் போட்டாலும் அது சரியாக டெய்சி அறையில் வந்து விழுமாம். இதற்காக பெட் சீட் ஒன்றை போட்டு பரிசோதித்துள்ளனர்.
வினோத திட்டம்
அது சரியாக டெய்சி அறையில் விழ, இதை சாதகமாக பயன்படுத்தி தங்களது திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். டெபாஸ் தனது விந்தணுவை ஒரு பிளாஸ்ட்டிக் பேக்கில் போட்டு, அந்த பெட்டிஷீட்டில் கட்டிவிட, டெய்சி அதை இழுத்து எடுத்துக் கொள்வாராம்.
இப்படியே ஒரு நாளைக்கு 5 முறை விகிதம் ஒரு மாதம் முழுக்க டெபாஸ் தனது விந்தணுவை அனுப்பியுள்ளார். அதை டெய்சி தனது பெண்ணுறுப்பின் வழியாகச் செலுத்தி, இதன் மூலமாகவே கருவுற்று குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். குழந்தைக்கு நடத்தப்பட்ட மரபணு சோதனையில் டெபாஸ்தான் குழந்தையில் தந்தை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
குடும்பத்தினர் நம்ப மறுப்பு
இருவரும் சந்திக்க வாய்ப்பே இல்லை என சிறை நிர்வாகத்தினர்கூறுகிறார்கள். டெய்சியை நான் பார்த்துக் கூட இல்லை என்றே டெபாஸ் கூறுகிறார். ஆனால் டெய்சியின் குடும்பத்தினர் இதை நம்ப மறுக்கின்றனர்.
இது குறித்து பேசிய, மியாமியின் கருவுறுதல் மையத்தின் மருத்துவ இயக்குநர் டாக்டர் பெர்னாண்டோ, இதற்கு முன்பு வரை இப்படி ஒன்றை நான் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால், மருத்துவ ரீதியாக இதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த வழியில் கர்ப்பமாக 5% கீழ் தான் வாய்ப்பு இருந்தாலும் அந்த பெண் கருவுற்று இருப்பது அதிசயம்தான்" என தெரிவித்துள்ளார்.