‘இயன் சூறாவளி’யால் பேரழிவைச் சந்தித்த புளோரிடா... - நிலைகுலைந்த மக்கள்... - நெஞ்சை ரணமாக்கும் வீடியோ..!

Viral Video Florida
By Nandhini 3 மாதங்கள் முன்

ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான புளோரிடா ‘இயன் சூறாவளி’யால் பேரழிவைச் சந்தித்துள்ளது.

‘இயன் சூறாவளி’வால் ‘பேரழிவு’

கடந்த சில நாட்களாக புளோரிடாவில் தொடர் கனமழை பெய்தது. இந்த கனமழையால் புளோரிடாவில் உள்ள முழு கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டன. பல நகரங்கள் வெள்ளத்தால் மூழ்கின. புளோரிடாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டன.

கடந்த செப்டம்பர் 29ம் தேதி புளோரிடாவின் தென்மேற்கு பகுதியில் ‘இயன் சூறாவளி’ புயல் பல அடி உயரத்திற்கு எழும்பி ‘பேரழிவு’ ஏற்படுத்தியது. 

இந்த சூறாவளியால் வீடுகள் மற்றும் நிலங்கள் புளோரிடாவில் அழிந்து போயியுள்ளன. ஃபோர்ட் மியர்ஸ் கடற்கரையில் ஏற்பட்ட பலத்த காற்றால் வீடுகள் இடிந்து விழுந்தன. பல வீடுகளில் வெள்ள நீரில் மூழ்கியது.

மரங்கள் வேரோடு சரிந்து விழுந்துள்ளன. இந்த ‘இயன் சூறாவளி’ பலத்த காற்று மற்றும் வெள்ளத்துடன் மாநிலத்தின் மேற்கு கடற்கரையைத் தாக்கியது. இயன் சூறாவளியால் தென்மேற்கு புளோரிடாவில் 1 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிகங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

florida-hurricane-ian-viral-video

நிலைகுலைந்த புளோரிடா

இந்நிலையில், ‘இயன் சூறாவளி’யால் புளோரிடாவே நிலைகுலைந்துள்ளது. தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் புளோரிடாவில் பல கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதை காணமுடிகிறது.