11 மாத குழந்தை; 3 மணி நேரமாக காருக்குள் துடிதுடிப்பு - கடவுளை கும்பிட்டு வந்த பெற்றோருக்கு அதிர்ச்சி!
காரில் விட்டுச் செல்லப்பட்ட குழந்தை வெப்பத்தால் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
11 மாத குழந்தை
அமெரிக்கா, வாஷிங்டனில் இருந்து 900 கிமீ தெற்கே உள்ள பாம் பேயில் உள்ள மவுண்ட் ஆஃப் ஆலிவ்ஸ் எவாஞ்சலிகல் பாப்டிஸ்ட் தேவாலயம்m அமைந்துள்ளது.

இங்கு தம்பதி தங்கள் 11 மாதக் குழந்தையை காருக்குள் தனியாக விட்டு ஆராதனைக்குச் சென்றுள்ளனர். இதில் அதீத வெப்பத்தால் குழந்தை மயக்கமடைந்துள்ளது.
அதீத வெப்பம்
இதனைக் கண்ட போலீஸார் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் hot car deaths என்று குறிப்பிடப்படுகின்றன. நாடு முழுவதும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 38 குழந்தைகள் இதனால் இறப்பதாக தெரிவிக்கப்படுகிறது.