விஜயகாந்த் சும்மாவா சொன்னார்..பதக்கத்தால் ஆனந்த கண்ணீரில் மிதக்கும் பெர்முடா
டோக்கியோ ஒலிம்பிக்கில் வரலாற்றில் முதன்முறையாக பெர்முடா நாடு தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரவாரமாக நடைபெற்று வருகிறது. ஜப்பான், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்கத்தை குவித்து வரும் நிலையில் நாங்களும் அதற்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை பெர்முடா நிரூபித்துள்ளது.
ஆம்.. பெண்களுக்கான ட்ரையத்தியன் போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பெர்முடா வீராங்கனை ஃபுளோரா டஃபி 55.36 நிமிடங்களில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார். இப்போட்டியில் பிரிட்டன் 2 ஆம் இடத்தையும், அமெரிக்கா 3 ஆம் இடத்தையும் பிடித்தன.
வெறும் 70,000 மக்கள் தொகையைக் கொண்ட பெர்முடா நாட்டில் இருந்து தங்கம் வெல்லும் முதல் வீராங்கனை என்னும் பெருமையை ஃபுளோரா பெற்றுள்ளார். கடந்த 1976ம் ஆண்டு, பளு தூக்குதல் பிரிவில் கிளாரன்ஸ் கேஹில் என்பவர் வெண்கலப்பதக்கம் வென்றதே அந்த நாட்டின் முதல் ஒலிம்பிக் பதக்கமாக அமைந்தது. அதன் பிறகு 45 ஆண்டுகள் கழித்து இப்போது தான் ஒலிம்பிக் பதக்கம் கிடைத்துள்ளது. அதுவும் தங்க பதக்கம்...!
இதிலிருந்து ஒரு நாட்டின் மக்கள் தொகை பதக்கம் வெல்ல காரணம் இல்லை. திறமை தான் முக்கியம் என்பதை ஃபுளோரா டஃபி நிரூபித்துள்ளார்.