புரட்டி போட்ட வெள்ளம்; 10 பேர் பலி - 70க்கும் மேற்பட்டோர் மாயம்!
மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழந்தனர்.
பெருவெள்ளம்
ஜம்மு-காஷ்மீர், கிஷ்துவார் மாவட்டத்தில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. அதில் ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டர் மழை பெய்தது.
இதனால் சோஷ்டி கிராமத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 16 குடியிருப்புகள், அரசு கட்டடங்கள், 3 கோயில்கள், 30 மீட்டர் அளவிலான மேம்பாலம், வாகனங்கள், மற்றும் ஒரு பாதுகாப்புப் படை முகாம் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.
கதுவா மாவட்டத்தில் இரு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக பெய்த பெருமழையில் 10 பேர் உயிரிழந்தனர். ஒரு சில தினங்களில், கிஷ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, 65 பேர் உயிரிழந்தனர்.
10 பேர் பலி
70க்கும் மேற்பட்டோர் மாயாகினர். தொடர்ந்து தோடா மாவட்டத்தில், மேக வெடிப்பு காரணமாக பெருமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள வைஷ்ணவி தேவி கோவில் அருகே மிகப் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். எனவே, கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கனமழை நீடிப்பதால் ஜம்முவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு, சம்பா, கத்துவா, ரியாஸி, உதம்பூர், ரஜோரி, ராம்பன், தோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் மேகவெடிப்பு, பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.