குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை
By Thahir
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குற்றால அருவகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனால் அருவிக்கு ஆனந்தமாக நீராட வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
சீசன் நேரங்களில் குளிக்க தடை விதிப்பது, தண்ணீர் இல்லாமல் பாறையை வருடி அருவி நீர் வரும் போது அனுமதி வழங்குவதும் என தங்களின் பொறுமையை இறைவன் முதல் இயற்கையும் அரசும் சோதிக்கிறது என பலரும் புலம்பி செல்கிறார்கள்.