மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

By Thahir Oct 16, 2022 01:29 PM GMT
Report

மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது இடத்தை 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை 

மேட்டூர் அணையில் நீர்மட்டம் அதிகரித்து வருவதையடுத்து சேலம் ஈரோடு திருச்சி தஞ்சாவூர் நாகப்பட்டினம் கடலூர் உள்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Flood Warning For 11 Districts

இந்த ஆண்டு இரண்டாவது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கரையோர காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.