வெள்ளத்தில் போட்டோ ஷூட் நடத்திய பாஜக தலைவர் அண்ணாமலை - பொதுமக்கள் ஆவேசம்

photoshoot video viral K. Annamalai karu. nagarajan
By Anupriyamkumaresan Nov 09, 2021 12:42 PM GMT
Report

சென்னயில் கடந்த இரண்டு நாள்களாக பெய்யும் மழையால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். தொடர் மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளை பல்வேறு அரசியல் கட்சியினர் ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்துவருகின்றனர்.

அந்தவகையில் பாஜக சார்பிலும் இன்று ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின்போது பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையுடன் பாஜக பிரமுகர் கரு. நாகராஜனும் சென்றார்.

வெள்ளத்தில் போட்டோ ஷூட் நடத்திய பாஜக தலைவர் அண்ணாமலை - பொதுமக்கள் ஆவேசம் | Flood Photoshoot Bjp Annamalai In Boat Viral Video

அவர்கள் அனைவரும் ஒரு படகை எடுத்துக்கொண்டு சென்றனர். அப்போது உடன் சென்றவர்களில் ஒருவர், “இவர்கள் எல்லாம் நிற்காத மாதிரி ஒரே ஒரு ஃபோட்டோ” என கூறிவிட்டு படகின் அருகில் இருந்தவர்களை இந்தப் பக்கம் வந்துவிடுங்கள் என கூறுகிறார்.

அதனை ஏற்றுக்கொண்ட அவர்களும் அங்கிருந்த நகர அண்ணாமலையும், நாகராஜனும் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

வெள்ளத்தில் போட்டோ ஷூட் நடத்திய பாஜக தலைவர் அண்ணாமலை - பொதுமக்கள் ஆவேசம் | Flood Photoshoot Bjp Annamalai In Boat Viral Video

இதனையடுத்து அங்கு நிற்கும் பெண் ஒருவரிடம் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை இருக்கும் மேலே சென்று தங்க்கொள்ளுங்கள் என கூறிவிட்டு, உடன் வந்தவர்களிடம் அந்தப் பெண்ணுக்கு பால் பாக்கெட்டும், மாவு பாக்கெட்டும் கொடுங்கள் என நாகராஜன் கூறுகிறார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.