காவிரி ஆற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட வயதான தம்பதி - கட்டில் கட்டி போராடி மீட்ட தீயணைப்புத்துறையினர்
ஆற்று வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்
சேலம் ஏற்காடு பகுதியில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. இதனையடுத்து, இன்று பிற்பகலில் மரப்பாலம் என்ற இடத்தில் காற்றாட்டு வெள்ளம் ஏற்பட்டது.
நாகலூர், செம்மநத்தம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் முழுவதும் வெள்ளத்தால் சூழ்ந்து காணப்படுகின்றன. காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 300க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
ஆற்று வெள்ளத்தில் சிக்கிய முதியவர்கள்
இந்நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நடுவே வயது முதிர்ந்த தம்பதி சிக்கிக்கொண்டனர். இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், மிகவும் கஷ்டப்பட்டு, கட்டில் கட்டி பத்திரமாக முதியவர்களை மீட்டனர். தீயணைப்புத்துறையினரின் இந்த முயற்சிக்கு அங்கிருந்த பொதுமக்கள் பலர் பாராட்டு தெரிவித்தனர்.
இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
