தமிழகத்தில் புரட்டிப்போட்ட வெள்ளம் - நீரில் மிதக்கும் வீடுகள் - பரிதவிக்கும் மக்கள்
ஆற்று வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்
சேலம் ஏற்காடு பகுதியில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. இதனையடுத்து, இன்று பிற்பகலில் மரப்பாலம் என்ற இடத்தில் காற்றாட்டு வெள்ளம் ஏற்பட்டது. நாகலூர், செம்மநத்தம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் முழுவதும் வெள்ளத்தால் சூழ்ந்து காணப்படுகின்றன.
காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் 300க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
மக்கள் தவிப்பு
ஈரோடு மாவட்டம் கொடுமுடி இலுப்பை தோப்பு பகுதியில் மொத்தம் சுமார் 75 குடியிருப்புகளில் 35 வீடுகள் வெள்ள நீரால் சூழ்ந்திருக்கின்றன. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தனியார் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகிகள் துரிதப்படுத்தி வருகின்றனர்.
