பேரிடர் காலங்களில் தானியங்கி மிதக்கும் வீடு கண்டுபிடித்து 7 வயது தமிழக சிறுமி சாதனை - பிரதமர் வாழ்த்து

Floating house Finding Little record
By Nandhini Jan 25, 2022 05:16 AM GMT
Report

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் உள்ள அத்தாபூர் 'டில்லி ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸில்' 2ம் வகுப்பு படித்து வரும் சிறுமி விஷாலினி (7).

இவர் தமிழகத்தின் விருதுநகரைச் சேர்ந்த பேராசிரியர் நரேஷ்குமார், டாக்டர் சித்ரகலா தம்பதியின் மகளாவார். விஷாலினி வெள்ள பேரிடர் காலங்களில் உயிர், உடைமை காக்கும் வகையில் தானியங்கி மிதக்கும் வீட்டை கண்டுபிடித்திருக்கிறார்.

இதில், சிறிய ஆக்ஸிஜன் சிலிண்டர், உணவு பொருட்கள் அடங்கிய பைகள், முதலுதவி பெட்டி, ஜி.பி.எஸ்., வசதி போன்ற வசதிகள் இடம் பெற்றிருக்கின்றன.

இந்த கண்டுபிடிப்பிற்காக மத்திய அரசால் இவருக்கு இளைய காப்புரிமை வழங்கப்பட்டிருக்கிறது. நேற்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சிறுமி விஷாலினிக்கு பால புரஸ்கார் விருது மற்றும் 1 லட்சம் ரூபாய் பரிசு தொகையை வழங்கி பாராட்டியுள்ளார்.

பேரிடர் காலங்களில் தானியங்கி மிதக்கும் வீடு கண்டுபிடித்து 7 வயது தமிழக சிறுமி சாதனை - பிரதமர் வாழ்த்து | Floating House Finding Little Record

பேரிடர் காலங்களில் தானியங்கி மிதக்கும் வீடு கண்டுபிடித்து 7 வயது தமிழக சிறுமி சாதனை - பிரதமர் வாழ்த்து | Floating House Finding Little Record