Flipkart கஸ்டமரா நீங்க..? இந்த ஹேப்பி நியூஸ் உங்களுக்குதான் - ஆனால் ஒரு கண்டிஷன்!
பிளிப்கார்ட் நிறுவனம் 'அதே நாள் டெலிவரி' என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
அதே நாள் டெலிவரி
இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் 'அதே நாள் டெலிவரி' என்ற புதிய வசதியை செய்துள்ளது. இதன் மூலம் ப்ராடக்டுகளை ஆர்டர் செய்த அதே நாளிலேயே கஸ்டமர்கள் பெறுக்கொள்ளலாம்.
முதல் கட்டமாக அகமதாபாத், பெங்களூர், புவனேஷ்வர், கோயம்புத்தூர், சென்னை, டெல்லி, கவுகாத்தி, ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, லூதியானா, மும்பை, நாக்பூர், புனே, பாட்னா, ராய்ப்பூர், சிலிகுரி மற்றும் விஜயவாடா ஆகிய நகரங்களில் இந்த வசதி அறிமுகமாகிறது.
நிபந்தனை
இந்த மாதத்தில் (பிப்ரவரி) இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்படும் என்று ப்ளிப்கார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வசதியை பெறுவதற்கு கஸ்டமர்களுக்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி ஆர்டர் செய்த அதே நாளில் டெலிவரி அம்சத்தை பெற விரும்பும் பயனர்கள் மதியம் 1 மணிக்குள் தங்கள் ஆர்டரை ப்ளேஸ் செய்ய வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் கஸ்டமர்களுக்கு ஆர்டர் செய்த அதே நாளில் கிடைக்க வேண்டும் என்பதற்காக ப்ளிப்கார்ட் இந்த முடிவை எடுத்துள்ளது.