ஐ போன் ஆர்டர் செய்தவருக்கு .. ப்ளிப்கார்ட் செய்த செயலால் வந்த அதிஷ்டம்
விழாக்காலத்தை முன்னிட்டு ஃப்ளிப்கார்ட், அமேசான், மீஷோ போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஆஃபர்கள் வழங்கப்பட்டிருக்கிறது. குறைந்த விலையில் உட்கார்ந்த இடத்திலிருந்தே பொருட்களை வாங்க முடிவதனால் மக்களும் ஆன்லைன் தளங்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.
ப்ளிப்கார்ட் சர்பிரைஸ்
ஆனால் அதிகப்படியாக குவிந்த ஆர்டர்களாலோ என்னவோ பலருக்கு ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக வேறு பொருள் வருவதாகவும், ஆர்டர் கேன்சல் செய்யப்படுவதாகவும் புகார்கள் வருகின்றன.
பெரும்பாலும் மொபைல் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை ஆர்டர் செய்பவர்களுக்கு செங்கல் போன்று எதாவது வரும். ஆனால் இங்கு ஒருவருக்கு ஃப்ளிப்கார்டின் தவறினால் அதிஷ்டம் வந்துள்ளது.
One of my follower ordered iPhone 13 from Flipkart but he recieved iPhone 14 instead of 13 ? pic.twitter.com/FDxi0H0szJ
— Ashwin Hegde (@DigitalSphereT) October 4, 2022
ப்ளிப்கார்டில் ஐபோன் 13 128 ஜிபி ஆர்டர் செய்தவருக்கு அதை விட விலை அதிகமான ஐபோன் 14 வந்தது. இதற்கு நெட்டிசன்கள் பலர் பலவிதமான ரியாக்ஷன்களை வழங்கியிருக்கின்றனர்.
வாடிக்கையாளருக்கு வந்த அதிஷ்டம்
ஐபோன் 14 அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் 13 மாடலின் விலைக் குறைந்தது. இதனால் விற்பனையும் அதிகரித்தது. ஆனால் இந்த சம்பவத்தை குறிப்பிட்ட நெட்டிசன் ஒருவர், ஐபோன் 13 மற்றும் 14க்கு இடையில் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லாததால் மாற்றி அனுப்பியிருப்பார்கள் என்று ஆப்பிள் நிறுவனத்தை நகைச்சுவையாக விமர்சித்துள்ளார்.
தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.