ஆன்லைன் ஷாப்பிங்; இனி ஆர்டரை கேன்சல் செய்ய கூடுதல் கட்டணமா?
இனி ஆர்டரை கேன்சல் செய்ய கட்டணம் வசூலிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் ஷாப்பிங்
டிஜிட்டல் யுகத்தில் ஏதேனும் பொருள் வாங்க வேண்டுமென்றால் கடைக்கு சென்றுதான் வாங்க வேண்டும் என்ற நிலை இல்லை. குண்டூசி முதல் தங்கம் வரை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.
ஆன்லைன் ஷாப்பிங்கின் போது நிறுவனங்கள் பல்வேறு தள்ளுபடிகளை வழங்குகின்றன. மேலும், வீட்டிற்கே வந்து பொருட்களை டெலிவரி செய்து விடுவதால் பெரும்பாலான மக்கள் இதையே விரும்புகிறார்கள்.
கேன்சல் கட்டணம்
வாங்கிய பொருள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், குறிப்பிட்ட நாட்களுக்குள் திருப்பி அனுப்பி விடலாம். அல்லது ஆர்டர் செய்த பிறகு பொருட்கள் டெலிவரி செய்யப்படும் முன்னே கூட கேன்சல் செய்து விடலாம். இதற்கு தற்போது வரை எந்த கட்டணமும் விதிக்கப்படவில்லை.
இந்நிலையில் ஆர்டரை கேன்சல் செய்வதற்கும் Flipkart மற்றும் Myntra போன்ற தளங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. முறைகேடுகளை தடுக்கவும், பொருட்களை கேன்சல் செய்வதால் விற்பனையாளர் மற்றும் டெலிவரி நிறுவங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய இந்த முடிவை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீங்கள் ஆர்டர் செய்த பொருட்களின் விலை மற்றும் பிற காரணிகளை பொறுத்து இந்த கட்டணம் மாறுபடும். ஆர்டர் செய்த குறிப்பிட்ட காலத்திற்குள் எந்த கட்டணமும் செலுத்தாமல் ரத்து செய்ய வாய்ப்பு வழங்கப்படும். தற்போது வரை இந்த தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகாத நிலையில் விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வரும் தகவல் வெளியாகியுள்ளது.