கேமராவை ஆர்டர் செய்த இளைஞர் - பெயிண்ட் டப்பாவை டெலிவரி செய்த நிறுவனம்
ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் கேமரா ஆர்டர் செய்த இளைஞருக்கு பெயிண்ட் டப்பா கிடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத் என்பவர் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் அடிக்கடி பொருட்களை வாங்குவது வழக்கம்.
இவர் சமீபத்தில் ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் டிஜிட்டல் கேமரா ஒன்றை முடிவு செய்துள்ளார். ரூ.28 ஆயிரம் மதிப்பில் கேனான் EOS 3000 D ரக கேமராவை ஆர்டர் செய்து 12 மாதங்கள் இ.எம்.ஐ. தவணையையும் பதிவு செய்துள்ளார். ஆவலுடன் காத்திருந்த வினோத்துக்கு டெலிவரி ஊழியர் பார்சலை கொடுத்து அது எடை குறைவாக இருந்துள்ளது.
சீலிடப்பட்ட பார்சலை உடனடியாக பிரித்து பார்த்தபோது அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். காரணம் உள்ளே கேனான் கேமராவுக்கு பதிலாக பழைய பிளாஸ்டிக் கேமராவும், லென்சிற்கு பதிலாக பெயிண்ட் டப்பாவும் இருந்துள்ளது.
இதனையடுத்து வினோத் இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.