நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாகிறார் முன்னாள் உலக அழகி
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக முன்னாள் உலக அழகி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடைபெற இருக்கிறது.
இதற்காக அங்கு மிக பிரமாண்டமான அரண்மனை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அதில், வருகிற 6-ந் தேதி முதல் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் படத்தில் இருக்கிறது. சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், நிழல்கள் ரவி, ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இதில் மிகப்பெரிய வேட்டையராக சரத் குமார் நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் ஏராளமான நடிகர்கள் நடிக்கவிருப்பதால் அவர்கள் தங்குவதற்காக ராமோஜி ராவ் பிலிம் சிட்டி தயாராகி வருகிறது.