விமானத்திற்குள் வெடித்த பவர் பேங்க்; 189 பயணிகளின் நிலை என்ன - அதிர்ச்சி வீடியோ

Viral Video Taiwan Flight
By Sumathi Jan 12, 2023 10:49 AM GMT
Report

 விமானத்திற்குள் பயணி ஒருவர் வைத்திருந்த பவர் பேங்க் வெடித்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

வெடித்த பவர் பேங்க்

தைவான் சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு 189 பயணிகளுடன் சுகுட் என்ற விமானம் தயாராக இருந்தது. போர்டிங் பாஸில் இருந்து அனைவரும் விமானத்திற்குள் வந்து அமர்ந்துள்ளனர்.

விமானத்திற்குள் வெடித்த பவர் பேங்க்; 189 பயணிகளின் நிலை என்ன - அதிர்ச்சி வீடியோ | Flight To Singapore Disastrous Power Bank Explodes

விமானம் புறப்படும் சில மணி நேரத்திற்கு முன்பு, பயணி ஒருவர் தான் வைத்திருந்த செல்போனுக்கு பவர் பேங்கில் ஜார்ச் போட்டார். அப்போது, அந்த பவர் பேங்கில் இருந்து எதிர்பாராத கரும்புகை எழத்துவங்கியது. பயந்துபோன அவர் உடனே அந்த பவர் பேங்கை கையில் இருந்து கீழே போட்டுள்ளார்.

பகீர் வீடியோ

உடனே அந்த பவர் பேங்கில் தீ பற்றி விமானம் முழுவதும் கரும்புகை எழுந்தது இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.இதனை கண்ட விமான பணிப்பெண்கள் தீயணைப்பு கருவியின் மூலம் தீயை அணைத்தனர். பின்னர் அவர்களை வேறு விமானத்தில் சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பவர் பேங் வெடித்ததில் அருகில் இருந்த பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவானது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதனால் தைவான் சர்வதேச விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.