30 ஆண்டுகளுக்குப் பிறகு தன் ஆசிரியை பார்த்த விமானப் பணிப்பெண் - ஓட்டிச் சென்று கட்டியணைத்த நெகிழ்ச்சி வீடியோ..!
30 வருடத்திற்கு பிறகு தன் ஆசிரியை பார்த்த விமானப் பணிப்பெண் ஓட்டிச் சென்று கட்டியணைத்த நெகிழ்ச்சி வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆசிரியை கட்டியணைத்த விமானப் பணிப்பெண்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், விமானத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது பள்ளி ஆசிரியையை விமானப் பணிப்பெண் லோரி பார்த்தார். உடனே மைக்கை எடுத்து பேசிய லோரி, இந்த மாத தொடக்கத்தில் சர்வதேச ஆசிரியர் தினத்தன்று எனது விருப்பமான ஆசிரியை திருமதி ஓ'கானலை பார்த்துள்ளேன் என்று கண்ணீர் மல்க பேசிவிட்டு, விமானத்தில் அவரை நோக்கி ஓடினார். ஓடிச் சென்று ஆசிரியரை கட்டி அணைத்து கண்ணீர்விட்டார் லோரி.
அப்போது, விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் கைதட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் நெகிழ்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Flight attendant Lori ran into Ms. O'Connell, her favorite teacher, earlier this month on Intl Teachers' Day. She couldn't help but share how meaningful this teacher was to a plane full of applauding passengers.
— GoodNewsCorrespondent (@GoodNewsCorres1) October 23, 2022
(?:vancouver_kthrasher)pic.twitter.com/bzTNSunKEO