பறக்க ரெடியான விமானம் ..ஜன்னல் வழியாக கீழே குதித்த பயணி.திக் திக் நிமிடங்கள்!

flight jumped
By Irumporai Jun 27, 2021 11:14 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

அமெரிக்காவில் ஒடும் விமானத்தில் இருந்து திடீரென கீழே குதித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து சால்ட் லேக் நகருக்கு 'யுனைடெட் எக்ஸ்பிரஸ் 5365' விமானம் புறப்பட்டு சென்றது.

 பாதுகாப்பு சோதனைகளை முடித்து விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்ததும், ஒடுபாதையை நோக்கி விமானம் சென்றுகொண்டிருந்தது.

அப்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் விமானத்தின்  கதவை பலமாக தட்டினார். இதனை தொடர்ந்து அந்த நபர் திடீரென விமானத்தின் அவசர கால கதவை திறந்து வெளியே குதித்தார்.

இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அறிந்த விமானியும் உடனடியாக விமானத்தை அவசர, அவசரமாக நிறுத்தினார்.

உடனடியாக கீழே குதித்த நபரைகைது செய்துஅவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். 

லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளுக்கு இதுபோன்று இடையூறு எற்படுவது இந்த வாரத்தில் இது இரண்டாவது முறைஎன தகவல்கள் கூறுகின்றன.

இந்த சம்பவம் குறித்து விமானத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.