நடுவானில் பாட்டிலில் சிறுநீர் கழித்த விமான பயணிகள் - அதிர்ச்சி காரணம்!
நடுவானில் பாட்டிலில் பயணிகள் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பைப்பில் அடைப்பு
இந்தோனேசியாவின் பாலியிலிருந்து வெர்ஜின் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 737 MAX 8 ரக பயணிகள் விமானம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கி புறப்பட்டது.
பாலியிலிருந்து பிரஸ்பேனுக்கு பயணம் நேரம் மொத்தம் 6 மணி நேரம். 4,500 கி.மீ தொலைவு. இந்த விமானத்தில் கழிவறை பைப்பில் அடைப்பு இருந்துள்ளது.
அதை சரி செய்ய பணியாளர்கள் இல்லை. எனவே, விமானம் அப்படியே திட்டமிட்டபடி டேக் ஆஃப் ஆகியிருக்கிறது.
பயணிகள் அவதி
இதில் 6 மணி நேர பயணித்தில் முதல் மூன்று மணி நேரம் தாக்கு பிடித்த பயணிகளால் அடுத்த மூன்று மணி நேரம் தாக்குபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து பாட்டிலில் சிறுநீர் கழித்துக்கொள்ளுமாறு விமான பணியாளர்கள் கூற, அவ்வாறே செய்ததால் விமானம் முழுவதும் துர்நாற்றம் வீசியிருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள நிறுவனம்,
போதுமான பணியாளர்கள் இல்லாததால்தான் இதுபோன்று நடந்தது என்றும், சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், பயண டிக்கெட்டுக்கான தொகையை திருப்பி கொடுப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.