திடீரென 3 நிமிடத்தில் 15000 அடி கீழே இறங்கிய விமானம்; அலறிய பயணிகள் - என்ன நடந்தது?
நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது 15000 அடி கீழே இறங்கிய விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கீழே இறங்கிய விமானம்
அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 5916 விமானம் புளோரிடா மாகாணத்தில் உள்ள சார்லோட் பகுதியில் இருந்தகெய்னெஸ்வில்லே நகருக்கு சென்றது.
புறப்பட்ட 43 நிமிடங்களில் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது விமானத்தில் ஏற்பட்ட அழுத்தம் சம்மந்தப்பட்ட பிரச்சனையால் திடீரென சுமார் 3 நிமிடங்களில் 15000 அடி கீழே இறங்கியுள்ளது. இதனால் பயணிகள் பெரும் அச்சத்தில் உறைந்தனர். பயணிகள் விமானத்தில் இருந்த ஆக்சிஜன் மாஸ்க்கை பயன் படுத்தி சுவாசித்துக் கொண்டனர்.
இதுகுறித்து விமானத்தில் பயணம் செய்த புளோரிடா பல்கலைக்கழக பேராசிரியர் ஹாரிசன் ஹோவ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ' இந்த பயணம் மிகவும் மோசமான அனுபவமாக அமைந்தது. புகைப்படங்கள் எடுக்க முடியவில்லை .எரியும் வாசனையும் பலத்த சத்தமும் கேட்டது.
நான் மிகவும் பயந்து போய்விட்டேன். இந்த கடுமையான சூழ்நிலையிலும் விமான ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என்று பதிவிட்டுள்ளார்.FlightAware பகிர்ந்த தகவலின்படி, விமானம் 11 நிமிடங்களில் கிட்டத்தட்ட 20,000 அடி கீழே வந்தது தெரிய வந்துள்ளது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மன்னிப்பு
இதுகுறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ' அழுத்த பிரச்சனை காரணமாக விமானத்தை பாத்திரமாகவும்,பாதுகாப்பாகவும் தாழ்வான உயரத்திற்கு விமானி கொண்டுவந்தார்.
பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நெருக்கடியான கட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட எங்கள் ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.