இன்று முதல் நடைமுறைக்கு வரும் 5 முக்கிய சவால்கள் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க..
இன்று டிசம்பர் 1 முதல் சில நடைமுறைகள் அமலுக்கு வருகிறது.
எல்பிஜி சிலிண்டர் விலை: 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.10.50 குறைந்து ரூ.1,739.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.868.50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.

இபிஎஃப் ஊதிய உச்சவரம்பில் ஏற்றம் : இபிஎஃப் ஊதிய உச்சவரம்பில் அதிகரிப்பு, இபிஎஸ் குறைந்தபட்ச ஓய்வூதிய உயர்வு ஆகியவை பற்றிய முக்கிய முடிவு எடுக்கப்படலாம்.
எஸ் பேங்க் கிரெடிட் கார்டு: பயனர்களுக்கு விமானம் மற்றும் ஹோட்டல்கள் தொடர்பான ரிவார்ட் புள்ளிகளில் வரம்பு அமைக்கப்பட உள்ளது.
HDFC பேங்க்: ஒரு காலாண்டுக்கு ரூ.1 லட்சம் வரை செலவழிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இலவச ஓய்வறை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.
SBI மற்றும் ஆக்ஸிஸ் பேங்க்: எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் பேங்க் இணைந்து தங்கள் ரிவார்ட் பாயிண்ட்டுகள் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்களை திருத்தியுள்ளன.