குன்னூர் விபத்து! முப்படைகளின் தலைமை தளபதி பயணித்தார்- உறுதியான அதிர்ச்சிகர தகவல்

coonoor flight crash
By Fathima Dec 08, 2021 09:09 AM GMT
Report

குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதியும் பயணித்த தகவல் உறுதியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் பாதுகாப்புத்துறையை சேர்ந்த மூத்த அதிகாரி உட்பட 14 பேர் பயணித்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.

விபத்துக்குள்ளான எம்ஐ 17 வி5 ரக ராணுவ ஹெலிகாப்டர் கோவை மாவட்டம் சூலூர் விமானதளத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ மையத்துக்கு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைவர் பிபின் ராவத்தும், அவரின் குடும்பத்தினரும் பயணித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.